Sunday, 29 March 2020

காந்திஜி

“துன்பமும் தீமையும் மிக நெருங்கியவர்களைக் கூட மாற்றார்களைப் போல் ஆக்கிவிடும் என்று யாரோ எங்கேயோ சொல்லியிருக்கிறார்கள் அல்லவா”
காந்திஜி
“பாபு ஏன் கடவுளைப் பற்றி என்னிடம் பேசக்கூடாது?” என்று கேட்டேன். “கடவுள் இருக்கிறார் என்று என்னை நம்பவைக்க தாங்கள் முயன்றிருக்க வேண்டும்” என்றும் கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே "எனக்குக் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கை உண்டு என்று நான் எண்ணியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அவ்வளவு நிச்சயமாகத் தெரியாது. ஆனாலும் அதன்படி வாழ வேண்டும் என்று நான் முயலுகிறேன். எனது வாழ்க்கை அந்த விஷயத்தைக் கற்பிக்கவில்லையெனில் எனது வாய் வார்த்தை ஒருபொழுதும் வெற்றி பெறாது. அதனால் நான் முயலவில்லை” என்று கூறினார்.

நினைவிருக்கட்டும். அவர் வேலை வாங்குவதில் மிகக் கறார் பேர்வழி. ஓ! அவர் என் விஷயத்தில் அநீதி இழைப்பதாக எண்ணி நான் எத்தனையோ தடவை அழுதிருக்கிறேன். நான் சிறுதவறு செய்துவிட்டாலும் அவர் என்னைக் கடுமையாக நடத்துவார். என்னைக் கண்ணீர் விட்டு அழவைத்துவிடுவார். அப்புறம் “உன் கண்ணீருக்கு நான் இரங்கமாட்டேன். ஏனெனில் கண்ணீர் கோபத்தின் அறிகுறியே தவிர வருத்தத்தின் அறிகுறி அல்ல. கோபத்தையும் வருத்தத்தையும் மயிரிழைக் கோடுதான் இனம் பிரிக்கிறது” என்று கூறுவார்.

மீரா பென் காந்திஜி குறித்து~அவர் ஒருநாளும் தம்மை உயர்ந்தவர் என்றோ, புரிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ எண்ணியதில்லை. ஆனாலும் அவர் நம்மைவிட எவ்வளவோ பெரியவர். அவரது எளிமை கபடமற்ற தன்மை காரணமாகவேகூட நம்மால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எவ்வளவு பெரியவர் என்பதை இன்று என்ன, என்றுமே நாம் உணரவில்லை.

No comments:

Post a Comment