ஒரு ஜென் துறவி காட்டு வழியே போய்க்கொண்டிருந்தார். இரவு. நல்ல குளிர். வழியில் தென்பட்ட ஒரு பவுத்த மடாலயத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டு, படுத்தார். நள்ளிரவு குளிர் தாங்கவில்லை. மடாலயத்தில் இருந்த மரத்தாலான சில புத்தர் சிலைகளை எடுத்துக் கொளுத்திப் போட்டுக் குளிர் காயத் தொடங்கிவிட்டார். அந்த மடத்தில் இருந்த துறவிகளுக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. இதென்ன அக்கிரமம்? நீயெல்லாம் ஒரு பவுத்தத் துறவியா? புத்தர் சிலையை எரித்தா குளிர் காய்வாய்?
போட்டுக் குதறிவிட்டார்கள் அந்தத் துறவியை. அவர் சொன்னார்: ‘எனக்குள்ளே இருக்கும் புத்தருக்கு ரொம்பக் குளிர் வந்துவிட்டது. அதனால் இந்தக் கட்டைகளை எரித்து அவருக்கு வெப்பம் கொடுத்தேன். உங்கள் புத்தர் இந்த மரக்கட்டையில்தான் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது!’

No comments:
Post a Comment